2015-10-19 16:22:00

வாழ்வுக்கு எதுவுமின்றி துன்புறுவோருக்கு உதவ முன்வர வேண்டும்


அக்.19,2015. வாழ்வதற்கு எவ்வித ஆதாரமுமின்றி துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கு மனித சமுதாயம் முன்வர வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வேறு நாடுகளிலிருந்து இத்தாலியில் நுழையும் மக்களை வரவேற்கும் உரோம் மையத்தை இச்சனிக்கிழமையன்று பார்வையிட்ட பான் கி மூன் அவர்கள், குடிபெயர்ந்து வந்துள்ள இம்மக்களின் கதைகளைக் கேட்டபோது இதயமே வெடித்து விடுவதுபோல் இருந்தது  என்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

குடிபெயர்வோரால் ஐரோப்பிய நாடுகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன என்பதை அறிந்துள்ளேன், எனினும், இந்தப் பிரச்சனை, எண்ணிக்கை பிரச்சனை அல்ல என்றும் தெரிவித்தார் பான் கி மூன்.

உரோமிலுள்ள Tenda Di Abramo என்ற குடிபெயர்வோர் மையத்தைப் பார்வையிட்டபோது அங்கிருந்த ஏறக்குறைய அறுபது சிறாருடன் உரையாடல் நடத்தினார் பான் கி மூன்.

போர் மற்றும் பாதுகாப்பின்மையால் உலகில் ஏறக்குறைய ஆறு கோடிப் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். கிரேக்கத்தில் 4 இலட்சம், இத்தாலியில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் புலம்பெயர்ந்துள்ளவர்கள் உள்ளனர்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.