2015-10-17 16:24:00

வியட்நாம்-சமய சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு கண்டனக் கடிதம்


அக்.17,2015. வியட்நாமின் மத்திய பகுதியில் அண்மையில் இடம்பெற்றுவரும் சமய சுதந்திரத்திற்கு எதிரான கத்தோலிக்கரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளூர் அதிகாரிகளுக்குத் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர். வியட்நாமின் Kontum மறைமாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வழிபாட்டுத்தலத்தை நகராட்சி நிர்வாகம் அழித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மறைமாவட்ட ஆயர் Michael Hoang Duc Oanh.

வியட்நாமில் கிறிஸ்தவ சமூகத்தின் வழிபாட்டு உரிமையை, உள்ளூர் நிர்வாகமும், தேசிய அரசும் பாதுகாக்குமாறு வலியுறுத்தியுள்ள ஆயர் Duc Oanh, கத்தோலிக்க சமூகத்திற்கு எதிராக வியட்நாம் கம்யூனிச அதிகாரிகள் நடத்தியுள்ள தாக்குதல்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.   

1884ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Kontum மறைமாவட்டத்திலுள்ள 12 இலட்சம் மக்களில் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.