2015-10-16 17:16:00

உலக கை கழுவுதல் தினம் அக்டோபர் 15


அக்.16,2015. ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளிலுள்ள நலவாழ்வு மையங்களுக்கு அருகிலுள்ள இடங்களில் தண்ணீர் வசதிகள் குறைவு என்றும், சோப்பைப் பயன்படுத்தி கை கழுவுதல் எளிமையானதாகவும், விலை குறைந்ததாயும் இருந்தாலும் இப்பகுதியில் இப்பழக்கம் மிகவும் குறைவு என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

உலக கை கழுவுதல் தினம் அக்டோபர் 15 இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்திகள் வெளியிட்ட யூனிசெப் நிறுவனத்தின் தண்ணீர், சுத்தம், மற்றும் தூய்மைத்திட்டத் தலைவர் Sanjay Wijesekera அவர்கள், சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள் இவற்றுக்கு அடுத்த நிலையில் கை கழுவுதல் நோயற்ற வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார்.

ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகள், 2030ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்குகளை ஏற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்குள் உலக கை கழுவுதல் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்றுரைத்த Wijesekera, ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதியின் 38 நாடுகளில் 50 விழுக்காட்டு நாடுகளிலே கை கழுவுதல் சிறப்பாக இடம்பெறுகின்றது என்று தெரிவித்தார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.