2015-10-15 15:59:00

கிறிஸ்தவத்திற்கு மதமாற்றப்படுகின்றனர் என்பது புனையப்பட்ட கதை


அக்.15,2015. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான பூர்வீக இன மக்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று இந்துத்துவ குழு அறிவித்திருப்பது புனையப்பட்ட கதை என்று குறை கூறியுள்ளார் ராஞ்சி கர்தினால் டெலஸ்போர் டோப்போ.

ஜார்கண்ட் மாநிலத்தில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படுவதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இவ்வாறு கதை புனைந்துள்ளது என்று கூறியுள்ளார் கர்தினால் டோப்போ.

ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஏறக்குறைய முன்னூறு Asur பூர்வீக இன மக்கள் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியுள்ளனர் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஊடகங்கள் வெளியிட்டுள்ள இச்செய்திகள் உண்மையல்ல என்றும், Asur பூர்வீக இன மக்கள் பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக உள்ளனர் என்றும் என்றும் UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார் கர்தினால் டோப்போ.

இந்தியாவின் 29 மாநிலங்களில், ஏழில், மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் 3 கோடியே 30 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 14 இலட்சம் பேரே கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.