2015-10-15 16:19:00

கடந்த 50 ஆண்டுகளில் பல்சமயத்தவரோடு திருஅவைக்கு உறவு


அக்.15,2015. கத்தோலிக்க திருஅவைக்கும், கிறிஸ்தவமல்லாத பிற மதங்களுக்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றிய Nostra Aetate அறிக்கை வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, இம்மாதம் 26 முதல் 28 வரை உரோம் நகரில் அனைத்துலக கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.

திருப்பீட பல்சமய அவையும், திருப்பீட யூதர்களுடன் உறவுகள் குறித்த ஆணைக்குழுவும், கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகமும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தவுள்ளன.

மேலும், Nostra Aetate என்ற 2ம் வத்திக்கான் பொதுச்சங்கக் கொள்கைத் திரட்டு வெளியான கடந்த ஐம்பது ஆண்டுகளில் திருஅவையில் பல்சமயத்தவரோடு உறுதியான உறவு உருவாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழு இயக்குனர் John W. Crossin அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் இரட்டைக் கோபுரம் தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் நடத்திய பல்சமய வழிபாடு பற்றிப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.