2015-10-13 16:12:00

அமெரிக்கத் திருத்தூதுப் பயணம் அரசியல்வாதிகளில் நல்தாக்கம்


அக்.13,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருத்தூதுப் பயணம், அந்நாட்டுக் கத்தோலிக்கர் மத்தியில், குறிப்பாக, அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு நல்ல நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஓர் ஆய்வு கூறுகின்றது.

திருத்தந்தையின் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நல்தாக்கங்கள் பற்றி ஆய்வு நடத்திய பியு ஆய்வு மையம், இத்திருத்தூதுப் பயணம், பல அரசியல்வாதிகளில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையை இன்னும் அதிக நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்க உதவியுள்ளார் என்று அமெரிக்காவின் இரு கட்சியினருமே கூறுகின்றனர் என்று அவ்வாய்வு தெரிவிக்கின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையை நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்க உதவியுள்ளார் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கின்ற கத்தோலிக்கரும், கத்தோலிக்கர் அல்லாதவரும் கூறுவதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.