2015-10-12 16:23:00

சிரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் Murad விடுதலை


அக்.12,2015. சிரியாவில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கத்தோலிக்க அருள்பணியாளர் Jacques Murad அவர்கள் அக்டோபர் 10, இச்சனிக்கிழமையன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

அருள்பணியாளர் Jacques Murad அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரிடம் பேசியதாகத் தெரிவித்த சிரியா திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்கள், அருள்பணி Murad அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஹோம்ஸ் நகருக்கு தென்கிழக்கே 60 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Mar Elian Al Qariatayn துறவு இல்லத்தின் தலைவராகப் பணியாற்றிய அருள்பணியாளர் Jacques Murad அவர்கள், கடந்த மே மாதம் அந்த இல்லத்திலிருந்து கடத்தப்பட்டார்.

மேலும், 2013ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி கடத்தப்பட்ட இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர் Paolo Dall'Oglio அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Murad அவர்களின் Mar Musa El Habashi, இல்லம், அருள்பணியாளர் Dall'Oglio அவர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.