2015-10-10 15:26:00

ஞாயிறு தினங்களை மதிப்பதற்குக் கற்றுக் கொள்வோம்


அக்.10,2015. “வேலை முக்கியம், அதேபோல் ஓய்வும் முக்கியம், எனவே ஓய்வு நேரங்களை, சிறப்பாக, ஞாயிறு தினங்களை மதிப்பதற்குக் கற்றுக் கொள்வோம்” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், செக் குடியரசில் நடைபெறவிருக்கும் தேசிய திருநற்கருணை மாநாட்டிற்குத் தனது பிரதிநிதியாக, திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Paul Josef Cordes அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செக் குடியரசின் Brno நகரில், இம்மாதம் 15 முதல் 17 வரை தேசிய திருநற்கருணை மாநாடு நடைபெறவிருக்கிறது. இது, 1993ம் ஆண்டில் செக் குடியரசு உருவான பின்னர் அந்நாட்டில் நடைபெறும் முதல் தேசிய திருநற்கருணை மாநாடாகும்.

ஜெர்மன் நாட்டுக் கர்தினால் Cordes அவர்களுடன், பிராக் உயர்மறைமாவட்ட அருள்பணியாளர் Radek Tich, České Budĕjovice உயர்மறைமாவட்ட அருள்பணியாளர் Zdeněk Marš ஆகிய இருவரும் கலந்து கொல்வார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.