2015-10-10 15:45:00

இந்தோனேசிய அருள்பணியாளர்-குடியேற்றதாரர்கள் நவீன அடிமைகள்


அக்.10,2015. இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஏழு இலட்சம் பேர் வேலை தேடி வெளிநாடு செல்கின்றனர், ஏற்கனவே அறுபது இலட்சம் தொழிலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று அந்நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

சனாத்தா தர்மா(யோக்யகார்த்தா) கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த வல்லுனர் அருள்பணி Benedictus Hari Juliawan அவர்கள், குடியேற்றதாரர் பிரச்சனை, இக்காலத்திலும் நவீன அடிமைத்தனம் இருக்கின்றது என்பதை நமக்குக் காட்டுகின்றது என்று கூறினார்.

மனித வர்த்தக மாஃபியாக்களின் கைகளில் சிக்கி கட்டாயத் தொழில் செய்யும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்துப் பேசிய அருள்பணி Juliawan அவர்கள், மனித வர்த்தகர்கள், இம்மக்களை இந்தோனேசியாவின் கிழக்கில் ஒதுக்குப்புறத்திலுள்ள தீவுகளில் இறக்கி விடுகின்றனர் என்று கூறினார்.   

இந்தோனேசியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உரிமை மீறலுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர், பல மனிதாபிமான குழுக்கள் இம்மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வருகின்றனர், ஆயினும் இம்மக்களின் மாண்பைக் காப்பதற்கு மேலும் அதிகப் பணிகள் ஆற்ற வேண்டியுள்ளது என்றும் கூறினார் அருள்பணி Juliawan.

இந்தோனேசிய இயேசு சபை மாநிலம், உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் வாழும் குடியேற்றதாரர்க்கு 2010ம் ஆண்டிலிருந்து உதவி வருகின்றது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.