2015-10-09 16:51:00

கருணைக் கொலையை அங்கீகரித்திருப்பது வாழ்வுக்குப் பெரும் தீமை


அக்.09,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கருணைக் கொலையைச் சட்டப்படி அங்கீகரித்திருப்பது மனித வாழ்வுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் கொடுமை என்று அந்நாட்டு ஆயர்கள் கூறினர்.

தாங்கள் பிறருக்குப் பாரமாக இருப்பதையும், கைவிடப்பட்ட நிலையையும் உணர்வதால், பிறர் உதவியுடன் நடத்தப்படும் தற்கொலைகளில் விஷ ஊசிகளை பலர் போட்டுக் கொள்கின்றனர் என்றும் ஆயர்கள் கூறினர்.

கலிஃபோர்னியா மாநில ஆளுனர் ஜெரி ப்ரௌன் அவர்கள் இச்சட்டத்தில் கையெழுத்திட்டிருப்பது குறித்துப் பேசிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் மனித வாழ்வு ஆணையத் தலைவர் கர்தினால் Seán O'Malley அவர்கள், ஆளுனரின் இத்தீர்மானம் மனித வாழ்வுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரிய கொடுமை என்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள கத்தோலிக்கர், மனித வாழ்வைக் காக்கும் தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டார் கர்தினால் O'Malley.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.