2015-10-08 15:48:00

தேர்தலில் குடிமக்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்


அக்.08,2015. டான்சானியாவில் இம்மாதம் 25ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலையொட்டி அரசியல்வாதிகள் குடிமக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.

டான்சானிய கத்தோலிக்க ஆயர் பேரவையும், கிறிஸ்தவ சபைகள் அவையும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆதாயத்திற்காக, சமய அல்லது இனத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் அரசியல்வாதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுள்ளன.

டான்சானியர்கள் பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் எல்லாரும் ஒரே நாட்டின் மக்கள் என்பதை மறக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.

அமைதியைக் குலைக்கும் சந்தைப் பொருளாக விலைக்கு வாங்குவதற்கு அனுமதிக்காதீர்கள் என்று தங்களின் அறிக்கையில் கேட்டுள்ள அத்தலைவர்கள்,  இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துபவர்கள் டான்சானிய மக்களே என்றும் கூறியுள்ளனர்.

ஆப்ரிக்க நாடாகிய டான்சானியாவில் ஏறக்குறைய 90 இலட்சம் கத்தோலிக்கர் உள்ளனர். இவர்கள், அந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர். 

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.