2015-10-08 15:08:00

கடுகு சிறுத்தாலும் – மனிதர்களிலேயே அதிகம் பொய் சொல்வது யார்?


மனிதர்களிலேயே அதிகம் பொய் சொல்வது யார் என இரண்டு கடவுள்கள் இடையே வாதம் வந்தது. ஒருவர் விற்பனையாளர்கள் என்றார். மற்றொருவர் தரகர்கள் என்றார். இதை சோதித்துப் பார்த்துவிட இருவரும் முடிவு செய்தனர். காலை 6 மணி முதல் இரவு 12 வரை ஒருநாளில் யார் அதிகம் பொய் சொல்கிறார்கள் என்பதை வைத்து முடிவெடுக்கத் திட்டமிட்டனர். தரகர் சார்பாக ஒரு மணியையும், விற்பனையாளர் சார்பாக ஒரு மணியையும் கட்டித் தொங்கவிட்டனர். அவர்கள் கூறும் ஒவ்வொரு பொய்க்கும் ஒரு மணி அடிக்கும் வகையில் அவற்றை அமைத்தனர். மறுநாள் காலை 6 மணிக்கு போட்டி ஆரம்பமானது. தரகர் சார்பில் கட்டப்பட்ட மணி அவ்வப்போது ஒலித்தது. விற்பனையாளர் சார்பில் கட்டப்பட்ட மணி அமைதியாக இருந்தது. காலை 10 மணிக்கு மேல் ஓரிரு முறை மட்டுமே ஒலித்தது. தரகர் சார்பாக கட்டப்பட்ட மணி மாலை வரை சுமார் 100 முறை அடித்தது. ஆனால், விற்பனையாளர் சார்பாக கட்டிய மணி 5 முறைதான் ஒலித்தது. மாலை 6 மணிக்கு மேல் இரண்டு மணிகளும் ஓசை எழுப்பவில்லை. இரவு 10 மணிக்கு இரவு உணவு முடிந்தது. இரண்டு கடவுள்களும், தரகர்கள்தான் தினமும் அதிகம் பொய் சொல்கிறார்கள் என்ற தீர்மானத்துக்கு வந்தனர். அந்த நேரம் பார்த்து, விற்பனையாளர் சார்பாக கட்டிய மணி, ‘கிணி கிணி’ என்று எண்ணக்கூட முடியாத அளவுக்கு இடைவிடாமல் ஒலித்தது. கடவுள்கள் இருவருக்கும் பதற்றம். இந்த நேரத்தில் விற்பனையாளர்கள் அப்படி என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று பார்த்தனர். விற்பனையாளர்கள் அமைதியாக உட்கார்ந்து தங்களின் நிறுவனங்களுக்கு அன்றைய அறிக்கைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.