2015-10-08 15:39:00

இரஷ்ய மொழி சுற்றுச்சூழல் திருமடல் உரையாடலுக்கு ஒரு வாய்ப்பு


அக்.08,2015. இரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'இறைவா உமக்கே புகழ்'(Laudato sì) திருமடல் இரஷ்யாவில் கத்தோலிக்கருக்கும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவருக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்று இரஷ்ய திருப்பீடத் தூதர் கூறினார்.

'இறைவா உமக்கே புகழ்' சுற்றுச்சூழல் திருமடல், மாஸ்கோ தூய ஆவியார் நூலக கலாச்சார மையத்தில் பிரான்சிஸ்கன் புத்தக வெளியீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இரஷ்ய கத்தோலிக்க ஆயர் பேரவைச் செயலர் அருள்பணி Igor Kovalevsky, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் இறையியலாளர் அருள்பணி Vladimir Shmalij ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நூலை வெளியிட்டு உரையாற்றிய  இரஷ்ய திருப்பீடத் தூதர் பேராயர் Ivan Jurkovich அவர்கள், சுற்றுச்சூழலியலின் ஆன்மீகக்கூறைப் பிரித்துவிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையில் இறங்க இயலாது என்று கூறினார்.

இதில் உரையாற்றிய ஆர்த்தடாக்ஸ் அருள்பணி Shmalij அவர்கள், இத்திருமடல் குறித்த தனது பாராட்டுக்களை வெளியிட்டு, இத்திருமடல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.