2015-10-07 15:55:00

கடுகு சிறுத்தாலும் – மனம் புண்படாத விமர்சனம்


தத்துவ அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ஒரு முறை  ஒரு வயலின் கச்சேரிக்கு அழைக்கப்பட்டிருந்தார். கச்சேரி முடிந்தவுடன், அங்கிருந்த பெண் நிர்வாகி ஒருவர் அவரிடம் வந்து,  வயலின் வாசித்த அந்தக் கலைஞரைப் பற்றி அவர் நினைப்பதைக் கூறும்படி கேட்டார்.

அதற்கு பெர்னாட்ஷா அவர்கள், சற்றும் தயங்காமல், “ இசைக் கலைஞர் பாதரவ்ஸ்கியை இவர் நினைவூட்டுகிறார்” என்று பதில் அளித்தார்.

அந்த நிர்வாகிக்கு இந்த பதில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  “பாதரவ்ஸ்கியா..? அவர்  ஒரு வயலின் கலைஞர் இல்லையே” என்று இழுத்தார்.

அதற்கு பெர்னாட்ஷா அவர்களும், முகத்தில் எந்தவிதமான உணர்வையும் காட்டாமல், “இவர் மட்டும் என்னவாம்!” என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.