2015-10-05 17:20:00

மூவருக்கு நொபெல் மருத்துவ விருது வழங்கப்படுகிறது


அக்.05,2015. மருத்துவத்திற்கான நொபெல் விருது 3 அறிவியலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலேரியாவைக் குணப்படுத்த புதிய சிகிச்சை முறை பற்றி கண்டறிந்த சீனாவைச் சேர்ந்த யுயு தூவிற்கும், உருளைப்புழுக்களால், அதாவது, வட்ட வடிவில் உள்ள ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த புதிய மருந்தைக் கண்டுபிடித்த அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் சி. கேம்பல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சட்டோஷி ஒமுராவிற்கு, மருத்துவத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகின் ஏழை நாடுகளில் வாழும் பல கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் இது போன்ற நோய்களை எதிர்த்துப் போராட, புதிய சக்தி வாய்ந்த வழிமுறைகளை மனித குலத்திற்கு இந்த கண்டுபிடிப்புகள் வழங்கியுள்ளன என்று நொபெல் விருது கழகம் கூறியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.