2015-10-03 16:20:00

சிரியா சண்டையில் CIA ஈடுபாடு கவலை தருகின்றது


அக்.03,2015. சிரியா நாட்டில் இடம்பெற்றுவரும் சண்டையில், அமெரிக்க ஐக்கிய நாட்டு CIA புலன் ஆய்வு நிறுவனத்தின் ஈடுபாடு தனக்கு கவலை தருவதாக, சிரியா பேராயர் ஒருவர் கூறினார்.

இரஷ்யர்கள், ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் இடங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை, ஆனால், சிரியா அரசுத்தலைவர் பஷீர் அல்-அசாத் அவர்களுக்கு எதிரான புரட்சியாளர்கள், CIA நிறுவனத்தால் பயிற்சியளிக்கப்படுகின்றனர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரிசோனா மாநில செனட்டர் John McCain அவர்களின் கூற்று தனக்கு கவலை தருவதாக சிரியா பேராயர் Jacques Behnan Hindo அவர்கள் கூறியுள்ளார்.

சிரியா அரசுத்தலைவர் அசாத் அவர்களைப் பதவியிலிருந்து நீக்க முயற்சிப்பது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்றும் பேராயர் Hindo அவர்கள் எச்சரித்துள்ளார்.

சிரியா அரசுத்தலைவர் அசாத் அவர்களை பதவியிலிருந்து நீக்குவது, ஐ.எஸ். இஸ்லாமிய அரசையோ அல்லது மேற்கத்திய நாடுகளையோ சார்ந்தது அல்ல, மாறாக, இது சிரியா நாட்டு மக்களைச் சார்ந்தது என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பேராயர் Hindo.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.