2015-09-29 15:43:00

2016ம் ஆண்டின் உலக சமூகத் தொடர்பு நாள் தலைப்பு


செப்.29,2015. "சமூகத் தொடர்பும், இறைவனின் இரக்கமும் : பலனுள்ள ஒரு சந்திப்பு" என்பது, 2016ம் ஆண்டின் உலக சமூகத் தொடர்பு நாளுக்கான தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடங்கவிருக்கும் இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு மையப் பொருளைப் பிரதிபலிக்கும் விதமாக, திருப்பீட சமூகத்தொடர்பு அவை இத்தலைப்பை அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டின் உலக சமூகத் தொடர்பு நாள், தூய ஆவியார் பெருவிழாவுக்கு முந்திய ஞாயிறு, மே 8ம் தேதி ஆண்டவரின் விண்ணேற்பு விழாவன்று சிறப்பிக்கப்படவுள்ளது. இது ஐம்பதாவது உலக சமூகத் தொடர்பு நாளாக அமையும். 

1963ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் Inter Mirifica கொள்கைத் திரட்டின் அடிப்படையில் இத்தினம் உருவாக்கப்பட்டது.

அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் உருவாக்கிய இந்த உலக சமூகத் தொடர்பு நாள், 1967ம் ஆண்டு மே 7ம் தேதி ஞாயிறன்று முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது.

உலக சமூகத் தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி, பத்திரிகையாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதியன்று வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.