2015-09-21 15:18:00

கடுகு சிறுத்தாலும் : வெற்றி வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்


ஒருமுறை மெய்யியலாளர் ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்கள், தன் நண்பர் ஒருவரின் தோட்டத்தைப் பார்க்கப் போனார். அப்போது அந்த நண்பர், அத்தோட்டத்தில் கம்பீரமாக உயர்ந்து நின்ற மரங்கள் அனைத்தின் வரலாற்றை விளக்கிக் கொண்டே தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார். ஓரிடத்தில் நின்று, ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டிச் சொன்னார் : இந்தத் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களும் காய்க்கின்றன. ஏனோ, இந்த ஒரு மரம் மட்டும் காய்ப்பதில்லை. நான் இதை வெட்டிவிடப் போகிறேன் என்று. பின்னர் இருவரும் அந்தத் தோட்டத்திலிருந்த மற்ற செடிகளையும் பார்த்துவிட்டு வீடு திரும்பினர். அந்த மரம் வெட்டப்படுவதை விரும்பாத ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்கள், மறுநாள் காலை முதல் வேலையாக அந்த மரத்தின் அருகில் போய் நின்றார். அந்த மரத்துடன் பேசினார். நீ அழகான மரம். உனக்கு நல்ல வயது. காய்க்க வேண்டாமா? பூக்க வேண்டாமா? நீ பூத்து மலரைக் கொடு; காய்த்துக் கனியாகு என்று பேசி அன்புடன் அதைத் தடவிக் கொடுத்தார். அந்த ஆண்டு முதன்முறையாக அந்த மரம் அமோகமாகக் காய்த்தது. எனவே வாழ்வில் எம்மாதிரியான தோல்வி வந்தாலும், சூழ்நிலை மோசமாக இருந்தாலும், அவற்றை அன்புடன் அணுகுங்கள்; உறவாடுங்கள். வெற்றி வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். எல்லாம் நலமாக அமையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.