2015-09-19 16:38:00

விபத்து, வேட்டையால் 40 விழுக்காட்டு குரங்குகள் அழிந்துள்ளன


செப்.,19,2015. மரங்களை வெட்டுதல், விபத்து, வேட்டையாடுதல் போன்றவற்றால் 40 விழுக்காடு குரங்குகள் அழிந்துவிட்டதாக தமிழகத்தின் காந்திகிராம பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்ட‌ ஆய்வில் தெரியவந்துள்ளது..

ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா கண்டங்களின் பல நாடுகளில் குரங்குகள் அதிகளவில் காணப்படும் நிலையில், தெற்கு ஆசியாவில் 45 இனங்களும், இந்தியாவில் 13 இனங்களும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி, கிழக்குதொடர்ச்சி மலைகளில் 8 இனங்களும் உள்ளன.

மருந்து, அழகு சாதன பொருட்கள், தோல், ரோமங்கள், மற்றும், உணவிற்காக குரங்குகள் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. உலகில் மூன்றில் ஒரு பங்கு குரங்கினங்கள் அழியும் நிலையில் உள்ளதாக ஐ.நா., பாதுகாப்பு அமைப்பு எச்சரித்து, உலக‌ அளவில் 50 வகை குரங்குகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

560 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே  தோன்றிய குரங்கு இனம், இன்று ஏறத்தாழ பாதியாக குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

ஆதாரம் :  Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.