2015-09-16 17:13:00

புனித பூமியில் ஐரோப்பிய ஆயர்களின் கூட்டம்


செப்.16,2015. திருத்தூதர்களின் வழித் தோன்றல்கள் என்ற அடிப்படையில், ஆயர்களின் தனிப்பட்ட அழைப்பை மீண்டும் கண்டுணர, புனித பூமியில் ஐரோப்பிய ஆயர்களின் கூட்டத்தை நடத்தினோம் என்று CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைந்த அவையின் தலைவர், கர்தினால் Peter Erdo அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 11, கடந்த வெள்ளி முதல், 16, இப்புதன் முடிய புனித பூமியின் பல இடங்களில் நடைபெற்ற ஐரோப்பிய ஆயர்களின் கூட்டம், எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்களின் அழைப்பின் பேரில் அங்கு நடைபெற்றது என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

உலகினர் கவனத்தில் பெரும்பகுதி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள் நோக்கி திரும்பியுள்ள வேளையில், புனித பூமியும் பிரச்சனைகளில் சிக்கியுள்ளது என்பதை மறக்காமல், ஐரோப்பிய ஆயர்கள் இங்கு வந்துள்ளது தங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது என்று முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.

புனித பூமியில் துவங்கி, ஐரோப்பிய நாடுகளில் பரவிய கிறிஸ்தவம், மீண்டும் தன் வேர்களைத் தேடி வந்திருப்பது, கிறிஸ்தவத்தின் ஒற்றுமைக்கு மற்றுமொரு அடையாளம் என்று முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.