2015-09-11 16:26:00

செர்பியா நாட்டு அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


செப்.11,2015. செப்டம்பர் 11, இவ்வெள்ளியன்று செர்பியா நாட்டு அரசுத் தலைவர் Tomislav Nikolić அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

செர்பியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், செர்பியா நாட்டின் பொது நலனுக்கென கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் செர்பியா இன்னும் முழுமையாக இணைவதற்குரிய வழிகளும், செர்பியா நாட்டிற்குள் கிறிஸ்தவ ஒன்றிப்பு வளர்வதற்கு ஏற்ற வழிகளும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டதென்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையுடன் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பின், அரசுத் தலைவர் Tomislav Nikolić அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் Paul Richard Gallagher அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.