2015-09-10 16:56:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் ஆசீர்


செப்.10,2015. 'கருணையும் மன்னிப்பும்' என்ற மையக் கருத்தில், ஆர்த்தடாக்ஸ் திருஅவைகள்  மேற்கொண்டுள்ள அனைத்துலக கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தை தன் ஆசீரை வழங்குகிறார் என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஒரு தந்திச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இத்தாலியின் Biella என்ற பகுதியில் உள்ள Bose துறவு மடத்தில், செப்டம்பர் 9, இப்புதன் முதல், 12 இச்சனிக்கிழமை முடிய, நடைபெறும் கருத்தரங்கிற்கு, அத்துறவு மடத்தின் தலைவர், சகோதரர் Enzo Bianchi அவர்களுக்கு கர்தினால் பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள், இதே கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில்,  மன்னிப்பு என்பது கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கி மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளின் உயிர்நாடி என்று குறிப்பிட்டுள்ளார்.

1965ம் ஆண்டு Enzo Bianchi என்ற கத்தோலிக்க பொதுநிலையினர் ஒருவரால் நிறுவப்பட்ட Bose துறவு மடத்தில், ஆர்த்தடாக்ஸ் ஆன்மீகத்தை மையப்படுத்தி நடைபெறும் 23வது அகில உலக கருத்தரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.