2015-09-03 15:53:00

இலங்கையில் அமைதியை வளர்ப்பதற்கு கத்தோலிக்கர்கள் ஆதரவு


செப்.03,2015. இலங்கையில் தற்போது பொறுப்பேற்றிருக்கும் அரசு, அமைதியையும், சகிப்புத் தன்மையையும் நாட்டில் வளர்ப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு, கத்தோலிக்கத் தலத்திருஅவை ஆதரவு வழங்கும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் அண்மையில் பொறுப்பேற்ற புதியப் பிரதமர், இரனில் விக்ரமசிங்கே அவர்களை, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், ஏனைய ஆயர்களும் சந்தித்தபோது, நாட்டில் ஒற்றுமை வளர, கத்தோலிக்கர்களின் பங்கு அவசியம் என்று, பிரதமர் கூறியதாக, L'Osservatore Romano என்ற வத்திக்கான் நாளிதழ், செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல், பிரதமர் விக்ரமசிங்கே அவர்கள், இந்து மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்களையும் சந்தித்து, இலங்கையில் அமைதி வாழ்வைக் கட்டியெழுப்ப அவர்களைக் கேட்டுக்கொண்டார் என்றும், இந்த நாளிதழ் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.