2015-08-31 15:57:00

திருத்தந்தை - உள்மனதின் முடிவுகளே, மேன்மைப்படுத்தும்


திருத்தந்தை - உள்மனதின் முடிவுகளே, மேன்மைப்படுத்தும் அல்லது தீட்டுப்படுத்தும்

 

ஆக.31,2015. சட்டங்களை வெளிப்படையாகப் பின்பற்றுவது, கிறிஸ்தவர்களாக இருப்பதற்குப் போதுமானது என்று எண்ணுவோருக்கு, கிறிஸ்து எச்சரிக்கை விடுக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆகஸ்ட் 30, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய நேரத்தில், இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

முன்னோர் தந்த மரபுகளைப் பின்பற்றி, அதே நேரம், கடவுளின் கட்டளைகளைப் புறந்தள்ளிய பரிசேயர்களின் வெளிவேடத்தை, இஞ்ஞாயிறு நற்செய்தியில் கிறிஸ்து சாடியதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அயலவரை  மறந்துவிட்டு, ஆண்டவனுக்குச் சேவை செய்வது, வெளிவேடமாக மாறும் ஆபத்தை விளைவிக்கும் என்று குறிப்பிட்டார்.

'மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்' (மாற்கு 7:15) என்ற நற்செய்தி வார்த்தைகளைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, நன்மை, தீமை இவை குறித்து நாம் எடுக்கும் முடிவுகள், நம் மனங்களிலிருந்து வெளிப்படுகின்றன என்றும்,  இம்முடிவுகளே, நம்மை மேன்மைப்படுத்தும் அல்லது தீட்டுப்படுத்தும் என்றும், மூவேளை செப உரையில் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.