2015-08-29 13:49:00

கடுகு சிறுத்தாலும் - வலது கையால் கொடுத்தால்தான் தர்மமா?


ஒருமுறை, கர்ணன், குளிப்பதற்கு முன், தன் இடது கையில் பிடித்திருந்த ஒரு தங்கக் கிண்ணத்திலிருந்து எண்ணெயை வலது கையில் ஊற்றி, உடலெங்கும் தேய்த்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் ஓர் அந்தணர் அவரிடம் வந்து, யாசகம் கேட்டார். உடனே, கர்ணன், தன் இடது கையால், தங்கக் கிண்ணத்தை அந்தணர்க்குத் தர்மமாகக் கொடுத்தார். அந்தணர் உடனே, "கர்ணா, இடது கையால் தர்மம் கொடுத்தால், கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் தீங்குவரும் என்று நமது சாஸ்திரம் சொல்கிறது. எனவே, கையைக் கழுவிவிட்டு, உன் வலது கையால் தர்மம் கொடு" என்று கேட்டுக்கொண்டார். கர்ணன் ஒரு புன்சிரிப்புடன், "அந்தணரே, அந்த சாஸ்திரம் எனக்கும் தெரியும். ஆனால், நான் இடது கையிலிருந்து வலது கைக்கு கிண்ணத்தை மாற்றுவதற்குள், என் மனம் மாறிவிடலாம் அல்லவா? எனவேதான், தர்மத்தை உடனே செய்தேன்" என்று பதில் சொன்னார்.

வலது கையால் கொடுத்தால்தான் தர்மமா? கொடுக்கின்ற தர்மத்தை விட, அதை இவ்வாறுதான் கொடுக்கவேண்டும் என்று நாம் வகுத்துக்கொண்ட சாஸ்திரங்கள் முக்கியமாகிப் போகும்போது, தர்மமே தொலைந்து போகும் ஆபத்து உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.