2015-08-29 15:17:00

அணுப்பரிசோதனை தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்பட ஐ.நா. கோரிக்கை


ஆக.29,2015. உலகை அணு ஆயுதங்கள் அற்ற இடமாக அமைப்பதற்கு, நாடுகள், அணுப் பரிசோதனைகள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும், அவ்வொப்பந்தத்தை அமல்படுத்துவதும் இன்றியமையாதது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமையன்று அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான ஐந்தாவது உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் அணுப்பரிசோதனையை நிறுத்துவதற்குத் தாங்களாகவே தீர்மானித்திருப்பதை வரவேற்றுள்ளார்.

உலகில் முதல் அணுகுண்டு போடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு, இந்த 2015ம் ஆண்டில் நினைவுகூரப்படுவதைக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலகில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட அணுப்பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

Kazakhstan குடியரசின் Semipalatinsk அணுப்பரிசோதனை இடம், 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மூடப்பட்டதை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான அனைத்துலக நாள் ஆகஸ்ட் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.