2015-08-28 15:58:00

உலக மிகப் பழமையான விவிலியம் பிரித்தானிய அருங்காட்சியகத்தில்


ஆக.28,2015. உலகில் இருக்கும் மிகப் பழமையான விவிலியப் பிரதி, இரண்டாவது முறையாக பிரித்தானிய நூலகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

எகிப்தில் பாரவோன் மன்னர்களுக்குப் பின்னர், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் 1,200 ஆண்டு வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்விவிலியப் பிரதி, பிரித்தானிய நூலகத்திலிருந்து பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு வருகிற அக்டோபரில் எடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

Codex Sinaiticus எனப்படும் இவ்விவிலியப் பிரதியை, 1933ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக, பிரித்தானிய நூலகம் அதனை வெளியே எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது இதனைப் பாதுகாப்பதற்காக Aberystwythல் சிறப்பு குகை கட்டப்பட்டபோது முதல் முறையாக, இவ்விவிலியப் பிரதி, பிரித்தானிய நூலகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது.  

ஆதாரம் : Christianglobe / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.