2015-08-27 15:49:00

UNICEF தூதராக, டென்னிஸ் முதல்தர வீரர் Djokovic தெரிவு


ஆக.27,2015. டென்னிஸ் விளையாட்டில், உலக அளவில், முதல்தர வீரரான Novak Djokovic அவர்களை, ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான UNICEF, தன் நல்லெண்ணத் தூதராக, இப்புதனன்று அறிவித்துள்ளது.

செர்பியா நாட்டைச் சேர்ந்த Djokovic அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் முதல் நிலை வகித்துள்ளதோடு, குழந்தைகளின் நலனுக்கென தன் பெயரால் ஓர் அறக்கட்டளையையும் உருவாக்கியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பிற்கு நன்றி கூறிய டென்னிஸ் வீரர், Djokovic அவர்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகளையும், பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றையும் உறுதி செய்வது தன் கடமை என்று கூறினார்.

2011ம் ஆண்டுமுதல், UNICEF அமைப்புடன் இணைந்து, குழந்தைகள் வாழ்வை மேம்படுத்தும் பல முயற்சிகளில், டென்னிஸ் முன்னணி வீரர், Djokovic அவர்கள் ஈடுபட்டார் என்பதும், பங்களாதேஷ், சீனா, பிலிப்பின்ஸ் ஆகிய ஆசிய நாடுகளில், ’Schools for Asia’ என்ற UNICEF முயற்சிக்கு, தன் முழு ஒத்துழைப்பை வழங்கிவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கன. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.