2015-08-26 16:14:00

சிறைக் கைதிகள் உருவாக்கும் திருத்தந்தையின் நாற்காலி


ஆக.26,2015. கியூபா நாட்டின் பாதுகாவலரான, Cobre அன்னை மரியாவின் திருநாளையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவநாள் முயற்சிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் அந்நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்கு ஒரு தயாரிப்பாக அமையும் என்று, கியூபா ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் அன்னை மரியாவின் திருநாள், செப்டம்பர் 19 முதல், 21 முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்கு, மக்களை, ஆன்மீக வழியில் தயாரிக்க, தகுந்த ஏற்பாடு என்று, ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியா நகரில், சிறைக் கைதிகளைச் சந்திக்கும் நிகழ்வில், அவர் அமர்வதற்கென அக்கைதிகள் நாற்காலி ஒன்றை வடிவமைத்துள்ளனர் என்று ZENIT கத்தோலிக்க செய்தி கூறுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூது பயணத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 27ம் தேதி, சிறைக் கைதிகளைச் சந்திக்கும் நிகழ்வில், அவர் அமர்வதற்கென சிறைக் கைதிகளில் சிலர் இந்த நாற்காலியை உருவாக்கியுள்ளனர்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.