2015-08-25 15:56:00

குடி மக்களுக்கு முழுசுதந்திரம் - சுவிட்சர்லாந்து முதல் இடம்


ஆக,25,2015. ஐரோப்பிய நாடுகளில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தையும், அனைத்துலக அளவில் உள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது சுவிட்சர்லாந்து.

அனைத்துலக அளவில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த Cato நிறுவனம் ஏறக்குறைய 152 நாடுகளில் ஆய்வு நடத்தி 2015ம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை, மக்களின் பாதுகாப்பு, உறவு முறைகள், மதம் மற்றும் சட்டம் தொடர்பான அரசு அணுகுமுறைகள், பன்னாட்டு  அளவில் வர்த்தகம் செய்யும் உரிமை உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பன்னாட்டு அளவில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியலில், ஹாங்காக், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, டென்மார்க்,  நியூசிலாந்து, கானடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரிட்டன், சுவீடன் என நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தப் பட்டியலில், இந்தியா 75வது இடத்திலும், இலங்கை 122வது இடத்திலும்,  கடைசி இடத்தில் ஈரானும் உள்ளன.

மேலும், ஜெர்மனி 12வது இடத்திலும், அமெரிக்க ஐக்கிய நாடு 20வது இடத்திலும், பிரான்ஸ் 33வது இடத்திலும், இஸ்பெயின் 37வது இடத்திலும் உள்ளன.

ஆதாரம் : தமிழ்வின் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.