2015-08-24 16:36:00

தாய்லாந்தில் இந்து கோவில் தாக்கப்பட்டதற்கு பல்மத கண்டனம்


ஆக.24,2015. கடந்த வாரத் துவக்கத்தில் தாய்லாந்து நகரிலுள்ள பிரபல இந்து கோவில் ஒன்று, வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வார இறுதியில் பல்மத பிரதிநிதிகளின் செபக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

Erewan கோவில் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நடத்தப்பட்ட இந்த செப வழிபாட்டில், இஸ்லாமியர்கள் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என பல மதத்தைச் சார்ந்தவர்கள் பங்குபெற்றனர்.

இச்செபவழிபாட்டிற்கென செய்தி அனுப்பிய தாய்லாந்து ஆயர் பேரவை, உயிரிழந்தவர்களுக்கான செபங்களுக்கு உறுதி கூறியுள்ளதுடன், காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17ம் தேதி பேங்காக்கின் இந்து கோவிலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர், 125க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தியை தாய்லாந்து மக்களுக்கு கடந்த புதனன்று அனுப்பியிருந்தார்.

ஆதாரம் : ICN  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.