2015-08-24 16:35:00

ஆசியா பீபியை சந்திக்க அவரின் தந்தைக்கு அனுமதி மறுப்பு


ஆக.24,2015. பாகிஸ்தானில் தேவ நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் பெண்மணி ஆசியா பீபியைச் சந்திக்க, அவரின் தந்தைக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதிலிருந்து, அவரைப் பார்ப்பதற்கான அனுமதியை, சிறை அதிகாரிகளும், மாநில அரசும், மறுத்து வருவதாக, ஆசியா பீபியின் தந்தை Soran Masihன் வழக்குரைஞர் Sardar Mushtaq Gill அவர்கள் கூறினார்.

2009ம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டு, 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபியை சந்திக்க, அவரின் தந்தைக்கு அனுமதி மறுத்துவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசின் செயல் குறித்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் வழக்குரைஞர்.

சிறையிலிருக்கும் மகளைச் சந்திக்க, ஒரு தந்தைக்கு எதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தை சிறை அதிகாரிகளும், மாநில அரசும் அறிவிக்க மறுத்து வருகின்றனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.