2015-08-22 15:46:00

கியூபாவில் கத்தோலிக்கத் திருஅவையின் பணிகளுக்கு பாராட்டு


ஆக.22,2015. கியூபாவில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியுள்ளது அந்நாட்டு அரசு.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற செப்டம்பரில் கியூபாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, ஒரு பன்னாட்டு செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஹவானா துணை ஆயர் Juan de Dios Hernández Ruiz அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் பணிகளை அரசு பாராட்டத் தொடங்கியுள்ள இக்காலத்தில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் இடம்பெறுவது நல்ல ஓர் அடையாளம் என்று கூறினார்.

கியூப அரசுக்கும், தலத்திருஅவைக்கும் இடையே உரையாடல் இடம்பெற்று வருகின்றது, அது மேலும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார் ஆயர் Hernández.

புதிய ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ள கியூப அரசு, 1959ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைக் கத்தோலிக்கத் திருஅவையிடம் திருப்பி அளித்துள்ளது என்றும், அருள்சகோதரிகள் மருத்துவமனைகளில் பணிசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் ஆயர் Hernández.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.