2015-08-22 16:21:00

அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் உலக நாள்


ஆக.22,2015. வரலாற்றில் அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் உலக நாள் ஆகஸ்ட் 23, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வர்த்தகத்திற்குப் பலியான இலட்சக்கணக்கான ஆப்ரிக்க மக்களை நினைவுகூர்வதற்கென 1997ம் ஆண்டில் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அவை இந்த உலக நாளை உருவாக்கியது.

1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கும், 23ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் Santo Domingo மக்கள் அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வர்த்தகத்திற்கு எதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கினர். அதன் பயனாக உலகில் இந்த அடிமை வர்த்தகம் ஒழிக்கப்படும் முயற்சிகள் தொடங்கின. தற்போது ஹெய்ட்டி மற்றும் தொமினிக்கன் குடியரசு நாடுகள் அமைந்துள்ள பகுதியே அக்காலத்தில் Santo Domingo பகுதியாகும்.

இவ்வாண்டு இத்தினத்தன்று, ஆப்ரிக்க வழிமரபினர் அனைத்துலக பத்தாண்டு என்ற நிகழ்வு தொடங்குகின்றது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.