2015-08-17 16:43:00

குடும்பத்திற்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து உறுதியோடு செயல்பட


ஆக.17,2015. நைஜீரிய சமூகத்தின் கலாச்சார மதிப்பீடுகளுக்கும், குடும்பத்திற்கும் எதிராகச் செல்லும் தீயக் கொள்கைகள் ஊக்கமளிக்கப்படுவதை எதிர்த்து, கத்தோலிக்கர்கள் உறுதியுடன் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு ஆயர் ஒருவர்.

நைஜீரியாவின் Port Harcourt மறைமாவட்டத்தின் ஆயர் Camillus Etokudoh அவர்கள், எட்டு புதிய குருக்களை திருநிலைப்படுத்திய திருப்பலியில் மறையுரையாற்றியபோது, இன்றைய உலகில், மாறிவரும் சமூக மதிப்பீடுகள் குறித்த கவலையை வெளியிட்டார்.

அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றம் என்ற பெயரில், ஆன்மீக, ஒழுக்க ரீதி மற்றும் கலாச்சார மதிப்பீடுகளைக் கைவிடுவது கவலை தருவதாக உள்ளது என்ற ஆயர் Etokudoh அவர்கள், இன்றைய உலகில் ஒரே பாலினத் திருமணங்கள், சமூக மதிப்பீடுகளுக்கு எதிராகச் செல்வதோடு, மனித மாண்பையும் குறைத்து மதிப்பிடுகின்றது என்றார்.

மனித மாண்புக்கு எதிராகச் செல்லும் அனைத்தையும் ஒதுக்குவதிலும், எதிர்த்து நிற்பதிலும் கத்தோலிக்கர்கள் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் ஆயர் Camillus Etokudoh. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.