2015-08-14 15:34:00

இரு இயேசு சபையினருக்கு இந்தோனேசிய அரசின் 2வது உயரிய விருது


ஆக.14,2015. இந்தோனேசிய அரசின் இரண்டாவது உயரிய விருது அந்நாட்டில் மறைப்பணியாற்றிய இரு வெளிநாட்டு இயேசு சபை அருள்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹாலந்து நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் Peter Joseph Zoetmulder, ஜெர்மன் நாட்டு அருள்பணியாளர் Franz Magnis-Suseno ஆகிய இருவரும், இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உழைத்ததைப் பாராட்டி 2015ம் ஆண்டின் Mahaputera விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதை அறிவித்துள்ள இந்தோனேசிய அரசுத்தலைவர் Joko Widodo அவர்கள், இந்தோனேசியாவின் முதல் மறைபோதகரான அருள்பணியாளர் Zoetmulder அவர்கள், ஜாவா கலாச்சாரம் காக்கப்படுவதற்கு உழைத்தவர் என்றும், அருள்பணியாளர் Suseno அவர்கள் அந்நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு உதவியவர் என்றும் பாராட்டியுள்ளார். 

இயேசு சபையில் பயிற்சி பெறுபவராக தனது 19வது வயதில் இந்தோனேசியா சென்ற ஹாலந்து அருள்பணியாளர் Zoetmulder அவர்கள், இந்தோனேசியாவில் பணியாற்றி, 1995ம் ஆண்டு, தனது 89வது வயதில் காலமானார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.