2015-08-12 16:25:00

சீனாவில் சிலுவைகளைக் காத்த இரு பெண்கள் மரணம்


ஆக.12,2015 சீன அரசு, Zhejiang பகுதியில் கிறிஸ்தவ கோவில்களின் சிலுவைகளை அகற்றிவருவதைத் தடுக்க, அக்கோவில்களில் ஒன்றில் தங்கியிருந்த இரு வயதான பெண்கள், அண்மையில் அங்கு வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மரணமடைந்தனர்.

Wenzhou என்ற ஊரில் கட்டப்பட்டிருந்த ஒரு கிறிஸ்தவக் கோவிலைக் காக்கச் சென்றிருந்த நால்வரில், 77 வயதான Huang Yusong, 81 வயதான Zhou Yanxiang ஆகிய இருவரும், அப்பகுதியில் திடீரென உருவான காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்விரு பெண்களின் உறவினர்கள் வழக்குத் தொடுக்காமல் இருந்தால், அவர்கள் குடும்பங்களுக்கு 11,000 டாலர்கள் இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக சீன அரசு அறிவித்துள்ளதென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்ட Zhejiang பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக, கிறிஸ்தவக் கோவில்களில் உள்ள சிலுவைகளை அகற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதாகவும் UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம்: UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.