2015-08-10 16:28:00

தொன்போஸ்கோ சிலை தகர்ப்பு - 4 பா.ஜ.க.வினர் கைது


ஆக.10,2015. அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தியில் திறக்கப்படவிருந்த புனித தொன்போஸ்கோ சிலையை அப்புறப்படுத்தி, ஆற்றில் வீசியெறிந்த நான்கு பி.ஜே.பி. கட்சியினரை கைது செய்துள்ளது, காவல்துறை.

Bharalu என்ற ஆற்றின் கரையில் புனித தொன்போஸ்கோவின் சிலையை வைப்பதற்கு அஸ்ஸாம் தலத்திருஅவை திட்டமிட்டிருந்த நிலையில், அச்சிலைமீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட குவஹாத்தி பேராயர் John Moolachira அவர்கள், புனித தொன்போஸ்கோ அரம்பித்த சலேசிய சபையினரின் கல்விப் பணியால் அஸ்ஸாம் மாநிலம் பெருமளவில் பலனடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே எனக் கூறினார்.

தங்கள் எதிர்ப்பை வெளியிட விரும்புவோர் அதனை நன்முறையில் தெரிவித்திருக்கலாம், அதற்கு மாறாக, இவ்வாறு, சிலையை ஆற்றில் வீசியெறிந்துள்ளது, கத்தோலிக்கர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர் Moolachira.

இந்த சிலை நிறுவுதலுக்கு, ஏற்கனவே, அப்பகுதி பாரதிய ஜனதா கட்சி தன் எதிர்ப்பை வெளியிட்டு வந்துள்ளது. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.