2015-08-04 16:03:00

வியட்நாமில் மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கு திருஅவை நடவடிக்கை


ஆக.04,2015. உலகில் அதிகமாக கருக்கலைப்புகள் இடம்பெறும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள வியட்நாமில், மனித வாழ்வைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பயிற்சிப் பாசறைகளை நடத்தி வருகிறது, அந்நாட்டுத் தலத்திருஅவை.

தென் கிழக்கு ஆசியாவில் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறும் நாடாகச் சொல்லப்படும் வியட்நாமில், ஆண்டுக்கு மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன. கருக்கலைப்பு செய்துகொள்வோரில், 60 முதல் 70 விழுக்காட்டினர், இரகசியமாக கருக்கலைப்புகள் செய்து கொள்ளும், 15க்கும் 19 வயதுக்கும் உட்பட்ட இளையோர் ஆவர். பல தனியார் நலவாழ்வு நிறுவனங்கள், மற்றும் சட்டத்துக்குப் புறம்பே இயங்கும் நிறுவனங்கள், இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், தலத்திருஅவையின் குழுக்களும், இயக்கங்களும், குறிப்பாக, Bắc Ninh மறைமாவட்ட இயக்கங்கள், மனித வாழ்வைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

Bắc Ninh மறைமாவட்டம் அண்மையில் நடத்திய விழிப்புணர்வு பாசறைகளில், குறைந்தது 65 இளைஞர்களும், இளம் பெண்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.