2015-08-04 14:44:00

கடுகு சிறுத்தாலும்... இறைவன் தருவதெல்லாம், விதைகளே!


உலகமென்ற சந்தையில், மிக உயர்ந்த, உன்னதமான பொருள்களை வாங்க வந்தார் ஓர் இளம்பெண். அச்சந்தையில் "இறைவனின் பழக்கடை" என்ற விளம்பரப் பலகையைக் கண்டதும் அவருக்கு அளவுகடந்த ஆனந்தம். தான் விரும்பும் தலை சிறந்த பழங்கள் அனைத்தும் அக்கடையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததைக் கண்ட இளம்பெண், அனைத்தையும் வாங்கிச் செல்லும் ஆவலுடன் உள்ளே சென்றார். கடையின் உரிமையாளரான கடவுளிடம், "இறைவா, எனக்கு தலை சிறந்த ஆப்பிள், மிகச் சுவையான ஆரஞ்சு, ஒப்பற்ற மாம்பழம் எல்லாம் வேண்டும்" என்று தன் பட்டியலைக் கூறினார். கடவுள் அவரிடம் ஒரு சிறிய பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார். தான் சொன்னதை இறைவன் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்துடன், அப்பெண் கடவுளைப் பார்த்து, தனக்கு விருப்பமான பழங்களின் பட்டியலை மீண்டும் கூறினார். கடவுள் அப்பெண்ணிடம், "நீங்கள் எதிர்பார்க்கும் பழங்கள் இங்கில்லை. என்னிடம் உள்ளதெல்லாம், பழ மரங்களின் விதைகளே" என்று கூறினார்.

இறைவன் நம் வாழ்வில் தருவதெல்லாம், விதைகளே, ஆரம்பங்களே! கனிதரும் வகையில் அவற்றை வளர்ப்பதும், கருவிலேயே வாடிப் போகச் செய்வதும் நம் பொறுப்பு!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.