2015-08-01 16:22:00

சுரங்கத் தொழிற்சாலைகளுக்கு எதிரான முயற்சியில் திருஅவை


ஆக.01,2015. அப்பாவி மக்களுக்கு பாதிப்பைக் கொண்டுவரும் சுரங்கத் தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கிறிஸ்தவ சபைகள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டுமென, பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவில் நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பிலிப்பைன்ஸின் லிப்பா பேராயர் ரமோன் ஆர்கெல்லெஸ் அவர்கள் கூறுகையில், சுரங்கத் தொழிற்சாலைகளால் ஏற்படும் அழிவுகளுக்கு அரசியல் தலைவர்கள் பாராமுகமாய் இருப்பது வருந்ததக்கது என்று தெரிவித்தார்.   

சுரங்கத் தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்களை ஒருங்கிணைப்பதில், கிறிஸ்தவ சபைகளுக்கு, குறிப்பாக, கத்தோலிக்கத் திருஅவைக்கு முக்கிய பங்கு உள்ளது என்று, இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான Kalikasan மக்கள் அமைப்பின் Clemente Bautista கூறினார்.   

மனிலா உயர்மறைமாவட்டம் உட்பட, பிலிப்பைன்ஸின் பல மறைமாவட்டங்கள் சுரங்கத் தொழிற்சாலைகளிலிருந்து தங்களின் முதலீடுகளை அகற்றிவிட்டன என்றும்  Bautista கூறினார்.

இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த இந்த மூன்று நாள் அனைத்துலக கருத்தரங்கில் சுரங்கத் தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்கள், பூர்வீக இன மக்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், திருஅவைப் பணியாளர்கள் என 28 நாடுகளின் ஏறக்குறைய 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.