2015-08-01 16:31:00

HIV நோய்க் கிருமிகளை வெளியேற்றும் புற்றுநோய் மருந்து


ஆக.01,2015. புற்று நோய்க்கான மருந்து ஒன்று மனிதர்களின் உடலில் மறைந்திருக்கும் HIV நோய்க் கிருமிகளை அவற்றின் மறைவிடங்களில் இருந்து வெளியேற்றவல்லது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் HIV நோய்க் கிருமிகள் பரவுவதற்கு எதிராகக் கொடுக்கப்படும் மிகவும் சக்திவாய்ந்த மருந்தான antiretroviral கூட்டுமருந்து (HAART) மனிதர்களின் இரத்தத்தில் இருக்கும் HIV நோய்க் கிருமிகளைக் கொல்கிறது.

ஆனால் இந்த நோயாளி சிகிச்சையை நிறுத்திவிட்டால், உடலின் வேறு இடங்களில் ஒளிந்திருக்கும் HIV நோய்க் கிருமிகள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கி விடுகின்றன.

இந்நிலையில் HIV நோய்க் கிருமிகளை வெளியே கொண்டுவருவதில் புற்றுநோய்க்கான PEP005 என்ற குறிப்பிட்ட மருந்து வீரியத்துடன் செயல்படுவதாக தற்போது PLoS Pathogens என்கிற இதழில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

PEP005 என்ற மருந்து, சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தோல் புற்றுநோயைத் தடுப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தின் ஒரு பகுதியாகும்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.