2015-07-29 17:06:00

இரண்டு இந்தியர்களுக்கு ரமோன் மகசேசே விருது


ஜூலை,29,2015. ஆசியாவின் மிக உயரிய விருதான இவ்வாண்டின் ரமோன் மகசேசே விருது, இரண்டு இந்தியர்கள் உட்பட ஐந்து பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகநலப் பணியாளர் அனுஷா குப்தா, AIIMS முதன்மை ஊழல் தடுப்பு முன்னாள் அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி ஆகிய இரு இந்தியரின் சிறந்த சேவைகளைக் கௌரவிக்கும் வகையில், ரமோன் மகசேசே விருதுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனுஷா குப்தா அவர்கள், இந்தியாவில் கலாச்சாரத்தை வழங்குவதில் மாற்றுமுறையில் சிந்தித்தவர் என்றும், சஞ்சீவ் சதுர்வேதி அவர்கள் ஊழல் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் பாராட்டியுள்ளது, ரமோன் மகசேசே விருதுக் குழு.

நொபெல் விருதுக்குச் சமமான ஆசிய விருதாக நோக்கப்படும் ரமோன் மகசேசே விருது, இவ்வாண்டில் லாவோஸ் நாட்டின் Kommaly Chanthavong, பிலிப்பைன்ஸ் நாட்டின் Ligaya Fernando-Amilbangsa, மியான்மார் நாட்டின் Kyaw Thu ஆகியோருக்கும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

1957ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அரசுத்தலைவர் Ramon Magsaysay அவர்கள் பெயரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.