2015-07-28 15:45:00

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 1,000 சிறுமிகள் கட்டாயத் திருமணம்


ஜூலை,28,2015. பாகிஸ்தானில் உள்ளூர் கிறிஸ்தவ மற்றும் இந்து சமூகங்களிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஆயிரம் சிறுமிகள் கட்டாயமாக முஸ்லிமாக மாற்றப்பட்டு முஸ்லிம் ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.

கராச்சியில் இயங்கும் Aurat அரசு-சாரா நிறுவனம் அண்மையில் தயாரித்துள்ள அறிக்கையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பீதெஸ் நிறுவனத்திற்கு செய்தி அனுப்பிய Aurat நிறுவன இயக்குனர் Mahnaz Rehman அவர்கள், கட்டாய மதமாற்றம் மற்றும் கட்டாயத் திருமண விவகாரம் பொதுவாக இடம்பெற்றாலும், காவல்துறை இதை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்று கூறினார்.

இப்படி முஸ்லிமாக மாற்றப்பட்டு முஸ்லிம் ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளில் பெரும்பான்மையினோர் கிறிஸ்தவ மற்றும் இந்து சமூகங்களைச் சார்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.   

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.