2015-07-27 16:07:00

போரில் இலட்சக்கணக்கான சிறார் சிக்குண்டு துன்புறுகின்றனர்


ஜூலை,27,2015. உலகில் வயது வந்தோர் நடத்தும் போரில் இலட்சக்கணக்கான சிறார் சிக்குண்டு துன்புறுகின்றனர் என்று யூனிசெப் நிறுவனத் தலைவர் Anthony Lake அவர்கள் கவலை தெரிவித்தார்.

போரில், சிறார் பயன்படுத்தப்படுவதை தடை செய்வது குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொண்டுவந்த பத்தாம் ஆண்டை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட Lake அவர்கள், போரில் இலட்சக்கணக்கான சிறார், கொல்லப்படுகின்றனர், காயமடைகின்றனர், பாலியல் வன்செயலுக்கு உள்ளாகின்றனர் மற்றும் கடத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

போர் இடம்பெறும் நாடுகளில் பள்ளிகளும், சிறாரின் வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன, சிறார்க்கு உணவும், தண்ணீரும், நலவாழ்வு வசதிகளும் மறுக்கப்படுகின்றன, பல்லாயிரக்கணக்கான சிறார், ஆயுதம் ஏந்திய படைகளிலும் குழுக்களிலும் கட்டாயமாகச் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார் Anthony Lake.      

போர் நடக்கும் நாடுகளில் சிறாரைப் பாதுகாப்பதற்கு இக்காலத்தில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டில் உலக அளவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சிறார் படைவீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் Anthony Lake. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.