2015-07-27 15:38:00

கடுகு சிறுத்தாலும்–மதிப்பு யாருக்கு? மனிதருக்கா, உடைக்கா?


முல்லா அவர்கள் அழுக்கு வேட்டி சட்டையோடு செல்வந்தர் ஒருவர் வீட்டுத் திருமண விருந்துக்குச் சென்றார். அவரை வாயிலிலே தடுத்தி நிறுத்திய காவலாளர், இது முதலாளி வீட்டுத் திருமணம், அதனால் உமக்கு அனுமதி இல்லை என்றார். அதற்கு முல்லா, நான் உங்கள் முதலாளிக்கு நண்பன், அதனால் நான் உள்ளே செல்வதற்கு அனுமதி அளி என்றார். முடியாது, ஏனெனில் நீங்கள் கோட், சூட்டோடு வரவில்லையே என்று சொல்லி உங்களை உள்ளே அனுமதிக்க மாட்டேன், இது உறுதி என்றார் காவலாளர். அவமானமாகத் திரும்பிச் சென்ற முல்லா அவர்கள், எப்படியும் முதலாளி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்வது எனத் தீர்மானித்தார். கடைக்குச் சென்று வாடகைக்கு கோட், சூட் வாங்கிப் போட்டுக் கொண்டு, வாடகைக் காரில் பந்தாவாகச் சென்றார். தலைவணங்கி வழிவிட்டார் காவலாளர். விருந்திலும், மரியாதையோடு பந்தியில் அமர்த்தப்பட்டார் முல்லா. உணவும் பரிமாறப்பட்டது. உடனே உணவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கோட், சூட்டுக்கு ஊட்டத் தொடங்கினார் முல்லா. முல்லாவின் செயலை பந்தியில் அமர்ந்திருந்த எல்லாரும் வியப்போடு வேடிக்கை பார்த்தனர். விருந்தைப் பார்வையிட வந்த முதலாளி, பதறிப்போய், முல்லா, இது என்ன, கோட், சூட்டுக்கு உணவூட்டுகிறீர் என்று கேட்டார். அப்போது முல்லா, முதலாளி, இந்த கோட், சூட்டுக்குத்தானே மதிப்பு என்றார். 

அன்பர்களே, நாம் அளிக்கும் மதிப்பு மனிதருக்கா, அல்லது அவர் அணியும் ஆடைக்கா, யாருக்கு?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.