2015-07-23 16:14:00

ஈராக் கிறிஸ்தவர்கள் குறித்து திருத்தந்தையர் கவலை


ஜூலை,23,2015. ஈராக் கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் மிகவும் ஏழ்மை நிலையில் துன்புறுகின்றனர் என்று, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கூறினார்.

வளைகுடாச் சண்டையின்போது, ஈராக்கில் ஐந்து ஆண்டுகள் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியுள்ள கர்தினால் Fernando Filoni அவர்கள், "ஈராக்கில் திருஅவை" என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள புத்தகம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், ஈராக் கிறிஸ்தவர்களின் தற்போதைய நிலைமைகளை விளக்கியுள்ளார்.

ஈராக் திருஅவையின் ஆரம்பம் முதல் இன்று வரையுள்ள நிலைமைகளை தனது புத்தகத்தில் விளக்கியுள்ள கர்தினால் Filoni அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் திருஅவை, வீரம்நிறைந்த திருஅவை என்று குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

போர், எப்போதும் அநீதியானது என்றும், ஈராக்கில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களால்,  கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களும், பிற சிறுபான்மை சமூகங்களும் துன்புறுகின்றனர் என்றும் கூறினார் கர்தினால் Filoni.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.