2015-07-18 16:14:00

மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் கானடா முதலிடம்


ஜூலை,18,2015. பன்னாட்டு அளவில் மதிப்பு மிக்க நாடுகள் பட்டியலில் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக, கானடா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகில் நாடுகளின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யும் RepTrak நிறுவனம் அண்மையில் 55 நாடுகளில் நடத்திய ஆய்வில் கானடா முதலிடத்தில் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நாடுகளின் அரசுகள், பொருளாதார நிலை மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில், கானடாவுக்கு அடுத்து நார்வே 2வது இடத்திலும், சுவீடன் 3வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 4வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5வது இடத்திலும் மதிப்பு மிக்க நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

48 ஆயிரம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 33வது இடத்திலும், பாகிஸ்தான் 53வது இடத்திலும் உள்ளன.

ஈரான், ஈராக் ஆகியவை 54 மற்றும் 55வது இடங்களில் இருக்கின்றன.

மேலும், இந்தியர்கள், தங்களின் நாடு குறித்து மிகவும் உயர்வாகவும், பெருமையாகவும் கருதுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : தமிழ்வின் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.