2015-07-17 17:15:00

குஸ்மான் சிறையிலிருந்து தப்பியோட்டம், மெக்ஸிகோ ஆயர்கள் கண்டனம்


ஜூலை,17,2015. மெக்ஸிகோவின் மிக மோசமான போதைப்பொருள் கடத்தல்குழுத் தலைவர்களில் ஒருவரான Joaquin 'El Chapo' Guzman அவர்கள், அந்நாட்டின் அதியுயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து தப்பித்து சென்றுள்ளது குறித்து அரசை குறை கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

பத்து ஆண்டுகளுக்கும் முன்னதாக சிறையிலிருந்து தப்பித்திருந்த நிலையில், 2014ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் கைது செய்யப்பட்ட Guzman அவர்கள், தனது குளியல் அறையிலிருந்து சுரங்கம் தோண்டி இரண்டாம் முறையாகத் தப்பித்துள்ளார்.

குஸ்மான் அவர்களை, அமெரிக்க ஐக்கிய நாடு தன்னிடம் ஒப்படைக்குமாறு மெக்ஸிகோவிடம் கேட்டிருந்தவேளை, மெக்ஸிகோ அரசு தனது நாட்டிலே அவரைக் கைது செய்தது மற்றும் குஸ்மான் அவர்கள் சிறையிலிருந்து இரண்டாம் முறையாகத் தப்பித்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.

நாட்டின் அதியுயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து இவர் தப்பித்து சென்றுள்ளது, மெக்ஸிகோ அரசுக்குள் நடக்கும் ஊழல் குறித்த சந்தேகங்களையும், அரசு மீது கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

மெக்ஸிகோ அரசு மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை குறைவதற்கும் இது காரணமாகியுள்ளது என்று அந்நாட்டு ஆயர் Jose de Jesus Martinez Zepeda அவர்கள் கூறினார்.

அனைத்துலக போதைப்பொருள் கடத்தலில் மிகவும் செல்வாக்கு மிக்க Sinaloa Cartel என்ற கும்பலின் தலைவரான குஸ்மான் கடைசியாக சிறைச்சாலையின் குளியலறைப் பகுதியில் காணப்பட்டுள்ளார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.