2015-07-16 16:31:00

புர்கினா பாஸோ குடியரசை வலுப்படுத்த காரித்தாஸ் முயற்சி


ஜூலை,16,2015. 'புர்கினா பாஸோ நாட்டின் குடியரசை வலுப்படுத்துதல், மற்றும் சமுதாயத்தை ஒருங்கிணைத்தல்' என்ற ஒரு திட்டத்தை அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு இச்செவ்வாயன்று துவக்கியுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம், பர்கினோ பாஸோ தன் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதால், குடியரசின் வலிமையை மக்கள் சரிவர உணர்வதற்கு இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று அந்நாட்டு காரித்தாஸ் தலைவர், ஆயர் Justin Kientega அவர்கள் Fides செய்திக்கு அனுப்பிய குறிப்பில் கூறியுள்ளார்.

அமைதி கலாச்சாரத்தை இளையோருக்கு கல்வி வழி புகட்டுதல், வெளிப்படையான, அமைதியான தேர்தலை உறுதி செய்தல், உள்ளூர் தலைவர்களை ஈடுபடுத்தி சமுதாய ஒருங்கிணைப்பை வளர்த்தல் ஆகியவை காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்று ஆயர் Kientega அவர்கள் விவரித்துள்ளார்.

800 இளையோருக்கு தலைமைப் பயிற்சி அளித்தல், அமைதி குறித்த கல்வி வழங்க, 2000 இளையோரைப் பயிற்றுவித்தல், மக்களின் குறைகளைத் தீர்க்க மறைமாவட்டங்களில் 150 வழக்கறிஞர்களை உருவாக்குதல் போன்றவை இந்த முயற்சியின் செயல் திட்டங்கள் என்று ஆயர் Kientega அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.